சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு இந்திய சமூகம் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும், குலா

 

Seaport Tamil school3சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவை தெரிவிப்பதற்காக தாம் சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று பின்னேரத்தில் சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“மேம்பாடு என்ற பெயரில் சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் இடமாற்றம் செய்யப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஏன், இப்பள்ளி மீண்டும் இடமாற்றம் செய்யபப்டுகிறது”, என்று குலா வினவினார்.

அழிந்து வரும், அழிக்கப்பட்டு வரும் இனங்களைப் போல் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் “ஆபத்திற்குள்ளான வகை” ஆக்கப்பட்டுள்ளன. சீபோர்ட் தமிழ்ப்பள்ளி அதில் ஒன்று.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் 115 மாணவர்கள் பயின்றனர். இப்போது போராட்ட சூழ்நிலையிலும், இன்று வரையில் 27 மாணவர்கள் தங்களுடைய படிப்பை இப்பள்ளியில் தொடர்கின்றனர் என்ற தகவல் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பாடம் கற்றுக்கொள்வதில் எப்போதுமே மிகவும் பிந்தங்கியவர்கள். இந்த விவகாரத்திலும் சிலாங்கூர் கல்வி இலாகா 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “Save Damansara SJKC” என்ற போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது சீபோர்ட் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் அவர்களின் செயல்பாடுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்றாரவர்.

பழைய எஸ்ஜேகேசியை பாதுகாக்கவும் டிரோப்பிக்கானாவில் ஒரு புதிய டாமன்சாரா பள்ளியையை தோற்றுவிக்கவும் நடத்தப்பட்டkula போராட்டம் மக்கள் அளித்த ஆதரவால் வெற்றி பெற்றதை குலா சுட்டிக் காட்டினார்.

இச்சம்பவத்திற்கு பிறகு, சமூக ஆதரவு பெற்ற கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான தேவையை சிலாங்கூர் கல்வி இலாகா புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றாரவர்.

துரதிருஷ்டவசமாக, அந்த இலாகா அவ்வாறான கொள்கை எதனையும் பின்பற்றவில்லை.

கடந்த வாரம், மஇகா தலைவர் ஜி.பழனிவேல் குறைந்த எண்ணிக்கையை கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படமாட்டா. அவ்வாறான பள்ளிகள் அதிகமான இந்தியர்கள் வாழும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றார்.

பழனிவேலின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கூறிய குலசேகரன், இடமாற்ற சர்ச்சைக்குட்பட்டுள்ள 80 ஆண்டுகால பழமை வாயந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை என்றார்.

ஒருவேளை, பழனிவேல் பிரதமரின் நஜிப்பின் முன்மாதிரியை பின்பற்றுகிறாரோ என்று வினவிய குலா, சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்) அமைச்சரவையின் 10 அம்ச தீர்வுக்கு முற்றிலும் முரணாக மலேசிய பைபில் கழகத்தில் அதிரடிச் சோதணை நடத்தியது குறித்து பிரதமர் நஜிப் மௌனம் காத்து வருகிறார் என்றார்.

சீபோர்ட் தமிழ்ப்பள்ளி இடமாற்ற பிரச்னையைத் தீர்க்க உதவுவதற்கான தலைமைத்துவத்தையும் துணிச்சலையும் பழனிவேல் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

SJKcசிலாங்கூர் மாநில அரசின் பிகேஎன்எஸ்சிடம் இருக்கும் சீபோர்ட் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் நிலத்தை மாநில அரசு அப்பள்ளிக்கு அளித்து அதனை அரசேட்டில் பதிவு செய்வது குறித்து சிந்தித்து  வருகிறது என்று கூறப்படும்  வேளையில், இந்த விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பி அதற்கு ஒரு சுமுகமான தீர்வை – சீபோர்ட் தமிழ்ப்பள்ளியை அது தற்போது இருக்கும் இடத்திலேயே நிலைநிறுத்துவது மற்றும் கம்போங் லிண்டுங்கானில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் ஒரு கூடுதல் பள்ளியை திறக்க அனுமதிப்பது –  காண்பதில் என்ன சிரமம் இருக்கிறது என்று குலா கேட்டார்.

பழனிவேல் இந்த விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பி அதற்கான சுமுகமான தீர்வை காண வேண்டும் என்று தாம் கடந்த வாரம் தெரிவித்திருந்ததை மீண்டும் கூறுவதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கமும் சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் பயனுக்காக நிலத்தை உடனடியாகவும் முறையாகவும் அரசேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

மக்களின் ஆதரவோடு “Save SJKC Damansara” போராட்டம் வெற்றி பெற முடிந்தது என்றால், சீபோர்ட் தமிழ்ப்பள்ளியை அது இருந்து வரும் இடத்திலேயே நிலைநிறுத்துவதற்கான முயற்சியும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெற முடியும் என்று குலசேகரன் அதிரிட்டு கூறினார்.