‘அல்லாஹ்’ என்னும் சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்ற அரச ஆணையைக் கேலி செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் எச்சரித்துள்ளார்.
அதன் தொடர்பில் சினமூட்டும் வகையில் அறிக்கைகள் விடுப்பது இஸ்லாம் மட்டுமே கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயம் என்பதை வலியுறுத்தும் அரசமைப்பை மீறும் செயலாகக் கருதப்படும் என்றாரவர்.
கடந்த வாரம் கெடா சுல்தான், சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்’ஸாம் ஷா, ஓர் அறிக்கையில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டிருந்தார். சுல்தான், நாட்டின் பேரசசருமாவார்.
நாமார்க்கும் குடியல்லோம் …
நமனை அஞ்சோம்….
அப்படி வுன்மயானால்/மாமன்னர் இஸ்லாம் மத தலைவர் என்றால் ஏன் யிப்பெரசனயை நீதி மன்றம் வரை கொண்டு சென்றீர்.அப்போது அமைச்சர்/பிரதமர் /நீதி துறை மாமன்னரை அவமதிப்பு செய்து விட்டனர்.இந்த நாட்டு மக்கள் எல்லோரும் மாட்சிமை தங்கிய மாமன்னரை மதிக்ரொம் இது கட்டாயம்.ஆனால் சபா/சரவ வில் சட்டம் தளர்த்த பட்டுள்ளது.
இப்படியே எவ்வளவு நாள்தான் இந்த நாட்டு மக்களை மிரட்டுவீர்கள் என்று பார்போம்…
புறம்போக்கு அமைச்சரான நீங்கள் ஏன் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளுகிறீர்கள்? காயாம்பு சரியாகச் சொன்னார். நீதிமன்றம் கொண்டு போகும் முன்பே அரச ஆணை கொண்டு வந்திருக்கலாமே.