கமலநாதன் தாக்கப்பட்ட சம்பவம்: வழக்குரைஞர்கள் கொடுத்துதவ மசீச இளைஞர்கள் முன்வந்தனர்

1 agcகல்வி  துணை  அமைச்சர் II பி. கமலநாதனைத்  தாக்கியதாகக்  கூறப்படும்  நபருக்கு  எதிராக சட்டத்துறை  தலைவர் (ஏஜி) அலுவலகம்  எந்த  நடவடிக்கையும்  எடுக்காதிருப்பதால் அந்நபருக்கு  எதிராக  வழக்கு  தொடுப்பதில்  வழக்குரைஞர்களைக்  கொடுத்துதவ  மசீச  முன்வந்தது. 
போலீஸ்  விசாரணை  முடித்து  ஏஜி-யிடம்  அறிக்கை  கொடுத்து  ஒரு வாரம்  ஆகிறது  ஆனால்,  அதன்மீது  இதுவரை  எந்த  முடிவும்  எடுக்கப்படாதிருக்கிறது  என  மசீச இளைஞர்  சட்டப் பிரிவுத்  தலைவர்  சூ  வே  செர்ன்  கூறினார்.

“சந்தேகத்துக்குரியவர்மீது   வழக்குத்  தொடுக்க ஏஜி-க்கு  உதவியாக  வழக்குரைஞர்களை  ஏற்பாடு  செய்ய  மசீச  இளைஞர்  சட்டப் பிரிவு  தயாராக  உள்ளது”, என்றாவர. 

சட்டத்துறைத்  தலைவர்  மசீச  வழக்குரைஞர்களை  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்களாக  நியமனம்  செய்து  வழக்கை  நடத்தலாம் என்றாரவர்.

நடவடிக்கை  எடுப்பதில்  தொடர்ந்து தாமதம்  காட்டுவது  ஏஜிமீதுள்ள  நம்பிக்கையைக்  குறைத்துவிடும்  அல்லது  சந்தேகத்துக்குரிய  நபர்  அரசியல்  தொடர்புள்ளவர்  என்பதால்  அவருக்கு  எதிராக  நடவடிக்கை எடுக்க  ஏஜி  தயாங்குகிறார்  என்ற தோற்றத்தை  உருவாக்கி  விடும்  என்றும்  அவர்  சொன்னார்.