சீபோர்ட் தமிழ்ப்பள்ளி நிலத்தைத் திருப்பி எடுத்துக்கொள்ள பிகேஎன்எஸ் ஆயத்தமாகிறது

1 schoolசீபோர்ட்  தமிழ்ப்பள்ளி  அமைந்துள்ள  நிலப்பகுதி  பள்ளிக்கே  உரியதாக  அரசு  ஏட்டில்  பதிவு  செய்யப்படுவது  தொடர்பில்  மாநில  அரசிடமிருந்து  எந்த  அறிவிப்பும்  இதுவரை  இல்லை  என்பதால்,  சிலாங்கூர் மேம்பாட்டுக்  கழகம் (பிகேஎன்எஸ்)  அந்த நிலத்தைத்  திரும்ப  எடுத்துக்கொள்ள  தயாராகி  வருகிறது.

27  மாணவர்கள்  இன்னும்  அந்த  இடத்தையே  பள்ளிக்கூடமாக  பயன்படுத்திக்   கொண்டிருக்கிறார்கள்.  இவர்களைப்  பெற்றோர்கள் புதிய  பள்ளிக்கு  இடமாற்றம்  செய்ய  வேண்டும்.  இல்லையேல், அவர்கள்மீது  சட்ட நடவடிக்கை  எடுப்பது  பற்றி  பிகேஎன்எஸ்  ஆலோசிக்கக்  கூடும்  என  அதன் நிறுவன  தொடர்பு  மேலாளர்  இஷாக்  இப்ராகிம்  கூறினார்.

ஆனால், அதற்குமுன் பெற்றோர்களிடம் நயமாக  பேசி அவர்களின்  பிள்ளைகளைப்  புதிய  பள்ளிக்கு  அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படும். இதற்காகவே  ஒரு  தனிக் குழு  அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய பள்ளி  4 கிலோ மீட்டர்  தள்ளி  கம்போங்  லிண்டோங்கானில்  அமைந்துள்ளது.