தியன் சுவாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை

 

MP - Thian Chuaதடை செய்யப்பட்டுள்ள புலாபோல் போலீஸ் பயிற்சி மையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக பிகேஆர் உதவித் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியன் சுவாவுக்கு இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டணையும் ரிம1000 அபராதம் விதித்தது.

அந்த மையத்திலிருந்து வெளியேற மறுத்ததால் சுவா ஏப்ரல் 28, 2012 பெர்சே 3 பேரணியின் போது கைது செய்யப்பட்டார்.

டிபிபி எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நீதிபதி மஹமுட் அப்துல்லா சுவா மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டணை நிறைவேற்றப்படுவதை தள்ளி வைத்தார்.