பாடிபிராஸ் நேசனல் பெர்ஹாட் (பெர்னாஸ்)-டைப் பங்குச்சந்தை பட்டியலிலிருந்து அகற்றும் முயற்சியை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் மாநிலத்தின் விவசாயிகளைப் பாதுகாக்க அது அவசியம் என அலோர் ஸ்டார் எம்பி குய் ஹிஸியாவ் லியோங் கூறினார்.
“பங்குச்சந்தையிலிருந்து அகற்றி பெர்னாஸை தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புஹாரியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர்”, என்றாரவர்.
முக்ரிஸ் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்தால் பூமி கோடீஸ்வரர்களை “எப்படியாவது’ அதிகம் “உற்பத்தி” ஆக்க வேண்டும் எனும் அவர் அப்பாவின் அபிலாசைக்கு அடிகொடுத்த மாதிரி ஆகிவிடுமே….! சைட் மொக்தாருக்கு அவர் அப்பாவின் ஆசி என்றும் உள்ளது… அதனால்தான் அவர் அரசாங்க உடமைகள் அநேகத்தை சுருட்டி தன பாக்கெட்டில் புகுத்திக்கொண்டு, இன்று மிகப் பெரும் கோடிசுவரர் ஆகி உள்ளார். இது போன்ற “பகற்கொள்ளை” கொள்கைகைகள் எல்லையின்றி தொடர்ந்து நடந்தால், ஏழை பூமிகளின் வறுமை தொடர்ந்து முடிவின்றி தவழும். ஆக NEP, NDP, NEM என அதே கொள்கையை வேறு2 ரூபத்திலே முடிவில்லா கதையா தொடர umNoB -க்கு நல்ல வாய்ப்பு – நாட்டை சுரண்ட .. ….!