த ஹீட் மீதான தற்காலிக தடை விதிப்பை அரசாங்கம் அகற்றியுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவியாரும் அளவுமீறி ஆடம்பரச் செலவு செய்வதாகக் கட்டுரை வெளியிட்டதை அடுத்து அவ்விதழுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடைவிதிப்பு நீக்கப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்று மாலை அந்த வார இதழுக்கு வந்து சேர்ந்ததாக தெரிகிறது.
பிரதமரையும் அவரது துணைவியாரையும் தவறாக எழுதி இருந்தால் அவர்கள் எழுதியவர்கள் மீது சிவில் சட்ட நடவிக்கை எடுப்பதுதானே முறை ..?! ஏன் இந்த Heat -டை தற்காலிகமாக தடைசெய்ய வேண்டும்? துக்ளக் சாம்ராஜ்யம் போல் இருக்கு இப்படி செய்யறது. நினைச்சா மூடுறது… , நினைக்கிலனா திறக்கிறது…!! இதுதான் உலகத்தரமுள்ள சனநாயகமோ?! இருக்கலாம், இங்கு எல்லாம் boleh தானே..!