நிதானம் காப்பீர்: கிறிஸ்துவ கூட்டமைப்பு வேண்டுகோள்

euபினாங்கு  தேவாலயத்துக்குள்  பெட்ரோல்  குண்டுகள்  வீசிப்பட்ட  சம்பவம்  தொடர்பில்  ஆத்திரம்  கொள்ளாமல்  பொறுமை  காக்க  வேண்டும்  என மலேசிய  கிறிஸ்துவ கூட்டமைப்பு (சிஎப்எம்)  கிறிஸ்துவர்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

“வெறுக்கத்தக்க  செயல்களான”  இதுவும்  இதற்குமுன்  பினாங்கில்  பல்வேறு  தேவாலயங்களில்  ‘ஏசுநாதர்  அல்லாவின்  மகன்’  என்ற  வாசகம்  பொறிக்கப்பட்ட  பதாதைகள்  தொங்கவிட்ட  சம்பவங்களும்  “இனங்களுக்கிடையில்  பகைமை” உண்டாக்கும்  நோக்கம்  கொண்டவை  என சிஎப்எம்  தலைவர்  ரெவரெண்ட்  டாக்டர்  இயு  ஹொங்  செங்  கூறினார்.

“இப்படிப்பட்ட   செயல்களால்  பொதுமக்கள்  கலவரமடைய  வேண்டாம், ஆத்திரப்பட  வேண்டாம்.

“தொழுகை இல்லங்களின்  புனிதத்தைக்  கெடுத்து  அவற்றைச்  சேதப்படுத்தும்  இப்படிப்பட்ட  செயல்களை  எதிர்ப்பதில்  அமைதி-விரும்பும்  மலேசியர்கள்  அனைவரும்  உறுதியுடன்  ஒன்றுபட்டு  நிற்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்”,  என இயு  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.