துணைப் பிரதமர் அலுவலகம் அதன் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியாகினிக்கு அனுமதி இல்லை என்று கூறித் தடுத்தது.
இன்று பிற்பகல், பாங்குனான் பெர்டானா புத்ராவில் “உயரும் வாழ்க்கைச் செலவுகள்” மீது முகைதின் யாசின் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்தினார். அதில் செய்தி சேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளர் கூட்டத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரிடம் தகவல் அமைச்சு கொடுத்திருந்த அங்கீகார அட்டை இருந்தும்கூட அனுமதி மறுக்கப்பட்டது..
பாதுகாவலர்கள் ஒரு பட்டியலைக் காண்பித்து அப்பட்டியலில் இடம்பெறாத ஊடகங்களுக்கு இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கூறினர்.
இதுவும் நமது PM -ன் உலகத்தரமுள்ள மலேசிய சனநாயகத்தின் மிக சிறந்த பண்பு கூறுகளில் ஒன்றுதான். சிறிதும் பாகுபாடற்ற ஊடக சுதந்திரம். நேர்மை, நீதிக்கு இவர்களை மிஞ்ச வேறு யாரும் பாரிலே இல்லை. அமெரிக்காவே இங்கு வந்து இவர்களிடம் அதுக்கு அரிச்சுவடி படிக்கணும்.