பிகேஆர் இளைஞர் பகுதி, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் காஜாங் இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை மட்டுமே தான் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் விடுத்துள்ள அறிக்கை, அப்துல் காலிட் இப்ராகிமை மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றும் நாடகம் விரைவில் அரங்கேறும் என்ற ஊகத்தை வலுப்படுத்துகிறது.
“நாட்டை வழிநடத்துவதில் அவருக்குள்ள அனுபவத்தை வைத்து காஜாங்கில் போட்டியிடவும் எம்பி ஆக நியமனம் ஆவதற்கும் அன்வார்தான் சிறந்த வேட்பாளர் என்று பிகேஆர் இளைஞர் பகுதி நம்புகிறது”, என்றாரவர்.
அன்வார் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார். தான் மந்திரி புசாராகும் விருப்பம் இல்லாதவரென்றும், இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறிவிட்டார். பின் எதற்காக அன்வார்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறீர்? அன்வாரை விட்டால், பி.கே.ஆறில் வேறு ஒரு பயலுக்கும் தகுதியில்லையா?