பொதுப்பணம் விரயம் செய்யப்படுவதைக் குற்றமாக்குவீர்

nur jazlanஅரசுப்  பணியாளர்கள்  கவனக்   குறைவால்  பொதுப்  பணத்தை  விரயம் செய்தலைக்  குற்றமாக்க  ஒரு  சட்டம்  கொண்டுவரப்பட்டால்  அதற்கு  தம்  ஆதரவு  நிச்சயம்  உண்டு  என்கிறார்  நாடாளுமன்ற பொதுக்  கணக்குக்  குழுத்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்.

ஆனால்,  தவறிழைக்கும்  அரசுப்  பணியாளர்கள்மீது  தலைமைச்  செயலாளரோ,  அமைச்சர்களோ  நடவடிக்கை  எடுப்பார்களானால்  இப்படிப்பட்ட  சட்டத்துக்கே  அவசியமிருக்காது  என்றார்.

அமலாக்கம் சரியாக  இல்லையென்றால்  சட்டங்களால்  எந்தப்  பயனுமில்லை  என  அந்த  பூலாய் அம்னோ  எம்பி  கூறினார்.

மலேசிய  ஊழல்  தடுப்பு  ஆணையத்தின்  விசாரணைப்  பிரிவுத்  துணைத்  தலைவர்  ஹான்  சீ  ரூல்,  பொதுப்பணத்தை  வீண்  விரயம்  செய்யும்  அரசுப்பணியாளர்மீது  கவனக்குறைவு  குற்றச்சாட்டு  சுமத்தப்பட  வேண்டும்  என்று  கூறியிருப்பது  குறித்து  கருத்துரைத்தபோது  நூர்  ஜஸ்லான்  அவ்வாறு  கூறினார்.