சபரி: பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் ஏமாறக் கூடாது

1 shaberyமாற்றரசுக் கட்சியான  பிகேஆரின்  அரசியல்  விளையாட்டுகளில்  பிஎன்  சிக்கிக்கொள்ளக்கூடாது   எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹமட்  சபரி  சீக்  எச்சரித்துள்ளார்.

உள்கட்சி  விவகாரங்களுக்குத்  தீர்வுகாணும்  விவேகமற்ற  பிகேஆர்  தலைவர்கள்,  கவனத்தைத்  திசைதிருப்புவதற்காக  இப்படிப்பட்ட  அரசியல்  ஆட்டங்களை  ஆடத்  தொடங்கியுள்ளனர்  என்றாரவர்.

லீ  சின்  செ  காஜாங்  சட்டமன்றத்  தொகுதியைத்  துறந்தது  அத்தொகுதி  மக்கள்  அளித்த  அதிகாரத்தை  ஏளனம்  செய்வதற்கு  ஒப்பாகும்  என்று  சபரி  கூறினார்.

“இடைத் தேர்தல்  என்பது  எளிதில்  நடத்தி  முடிக்கும்  ஒன்றல்ல. அதற்கு  ஆகும்  செலவும்  கொஞ்சநஞ்சமல்ல”,  என்றாரவர். 

பிகேஆரின்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதி  ஒருவர்  இடைத்  தேர்தலுக்கு  வழிவிட  தொகுதியைத்  துறப்பது  இது  முதல்  முறை அல்ல.

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான் அசீசா  வான்  இஸ்மாயில்,  2008-இல்  தம்  கணவர்  அன்வார்  இப்ராகிம்  போட்டியிடுவதற்காக  பெர்மாத்தாங்  பாவ்  நாடாளுமன்றத்  தொகுதியைக்  காலி  செய்து  கொடுத்ததை  சபரி  சுட்டிக்காட்டினார்.