காஜாங்கில் பிஎன்-னைப் பிரதிநிதித்து மசீசதான் போட்டியிடும். அதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஏற்க வேண்டும் என மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் கூறினார்.
“காஜாங்கைக் வெல்வது நம் ஒருமித்த குறிக்கோளாகும். (அப்படி இருக்க) வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பழைய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றவர் வெளிப்படையாகக் கூறி இருக்க வேண்டாம்”, என்றாரவர்.
பிஎன் இளைஞர் தலைவரான கைரி பிஎன் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொங் வலியுறுத்தினார்.
கைரி, காஜாங்கில் மசீச-தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் பிஎன் கட்சிகளில் பொருத்தமான வேட்பாளர் யார் எனத் தெரிந்து அவரைத்தான் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்றும் நேற்று கூறி இருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் கூறுவதை ஏற்க முடியாது.. அங்கே நஜிப் தான் போட்டியிட வேண்டும்!
ஹாய் …ஹையா….. ‘நேத்ர’ வின் தேர்வு ‘பலே பாண்டியா’ தான். சரியான போட்டி! ஆனால், இந்த பலரின் ‘கனவு’ நனவாகுமோ??
mca UMNO அழிந்து போங்கடா நீங்கள் இருப்பது மக்களுக்கு பாரம்
அப்புடினா மா சி சா பிரயோசனம் இல்லை என்று அவர் குறுவது உன் மண்டைக்கு உரைக்க வில்லையா
ம சீ ச வுக்கு நிலையான பேரு sevan & eleven அடுத்த பொது தேர்தல் வரை !
கைரி ரொம்ப பேசாதே .சின்னபிள்ள தனமா இருக்கு உமது பேச்சு.