எம்பி கட்சிக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குவார்

1khalid2சிலாங்கூர் மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  நிறுவனத்  துறையிலிருந்து  வந்தவர்  என்பதால் எப்போதும்  மாநில  நிர்வாகம்  நன்றாக  இருக்க  வேண்டும்  என்பதற்கே  முக்கியத்துவம்  கொடுப்பார்.

“சிலாங்கூரைச்  சீரமைப்பதுதான்  என்  குறிக்கோள். ஆதரவு  வேண்டும்  என்பதற்காக  மக்களைத்  திருப்திப்படுத்துவது  இரண்டாம்  பட்சம்தான்”,  என்றவர்  சொல்வார்.

ஆனால்,  இதுவே பலரும் காலிட்டைக்  குறைகூற   காரணமாக  உள்ளது. அவரைக்  குறைகூறுவோர்  அவர்  நல்ல  நிர்வாகி  என்பதை  ஒப்புக்கொள்கிறார்கள்.  ஆனால்,  சிலாங்கூரை  அவர்  சொந்த  நிறுவனம்போல்  நினைத்து  நடந்துகொள்கிறார்.  கட்சிக்கு  போதுமான  நேரத்தை  ஒதுக்குவதில்லை என்று  குற்றம்  சொல்கிறார்கள்.

இப்போது  கட்சியில்  அவரை  இடமாற்றம்  செய்யும்  முயற்சி  மேற்கொள்ளப்படுவதுபோல்  தெரிவதால்  அவர்  தம்  போக்கை  மாற்றிக்கொள்ள  முடிவு  செய்திருக்கிறார்.

“நிர்வாகம்  நன்றாக  இருக்க  வேண்டும்  என்பதற்காக  நேரத்தில்  80  விழுக்காட்டை  அதற்கு  ஒதுக்கினால்  அரசியலுக்கு  20  விழுக்காட்டைத்தான்  செலவிட  முடிகிறது. இனி, இந்த  20 விழுக்காட்டை  40  ஆக  60  ஆக  ஆக்கிக்கொள்ள  வேண்டும்போல்  தோன்றுகிறது”, என்றாரவர்.

ஒரு  நேர்காணலில்  காலிட்  இவ்வாறு  கூறினார்.