தி கியாட்: லியோ அன்வாரை எதிர்த்து போட்டியிடலாமே

1 ongமுன்னாள்  மசீச  தலைவர்  ஒங்  தி  கியாட்,  காஜாங்  இடைத்  தேர்தலில்  அன்வாரை  எதிர்த்து  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  களமிறங்குவதே   பொருத்தமாக  இருக்கும்  என்று  மொழிந்துள்ளார்.

காஜாங்கில்  தேசிய  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்    போட்டியிடுவதால்  அவரை  லியோ  போன்ற  உயர்  தலைவர்  எதிர்ப்பதுதான்  பொருத்தமாக  இருக்கும்  என்றார்.

“தேர்தலில்  லியோ  வென்றால் அது  சிலாங்கூர்  மசீச  தலைவர்  என்ற  அவரது நிலையை  வலுப்படுத்தும்  என்பதுடன்  சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  மசீச-வின்  பிரதிநிதித்துவம்  இல்லை  என்ற  களங்கத்தையும்  துடைக்கும்.

“அந்த  வகையில்.  லியோவை  காஜாங்கில்  மசீச-பிஎன்  வேட்பாளராக  நியமிக்க  வேண்டும்  என  இடைத்  தேர்தலைக்  கவனிக்கும்  மத்திய  செயல்குழுத்  தலைவர்  வீ  கா  சியோங்கைக்  கேட்டுக்கொள்கிறேன்”,  என  ஒங்  கூறினார்.

காஜாங்  வாக்காளர்களில்  40.4  விழுக்காட்டினர்  சீனர்கள்  என்பதால்  சீனர்களின்  ஆதரவு  எந்த  நிலையில்  உள்ளது  என்பதைத்  தெரிந்துகொள்ளும்  சோதனையாகவும்  அது  இருக்கும்  என்றாரவர்.