பதவி துறக்கும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க சட்டம் தேவை

aminதகுந்த  காரணமின்றி தொகுதிகளைக்  காலி  செய்யும்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளைத்    தண்டிக்க  சட்டம்  கொண்டுவரப்பட  வேண்டும்  என தலைமைத்துவ,  மேம்பாட்டு ஆய்வுக்  கழகம்(லீட்)  பரிந்துரைத்துள்ளது.

“தேவையற்று  பதவிதுறப்பதைச்  சட்டப்படி  தடுப்பது  அவசியம்”, என  அதன்  நிறுவனரும்  இயக்குனருமான  அமின்  அஹ்மட்  கூறினார்.

இடைத்  தேர்தல்  செலவில்  ஒரு  பகுதியைப்  பதவிதுறக்கும்  அரசியல்வாதி  அல்லது  அவரது  கட்சி  ஏற்க  வேண்டும்  என்றும்  சட்டம்  கொண்டுவரலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  கட்சிதாவினால்  அல்லது  தங்களைச்  “சுயேச்சைகள்:”  எனப்  பிரகனடப்படுத்திக்  கொண்டால்  அத்தொகுதிகளில்  இடைத்  தேர்தல் நடத்தப்பட  வேண்டும்  என்றும்  அமின்  கூறினார்.