இவ்வாண்டு கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டம் இல்லை

adnanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சிக்கனத்தை  வலியுறுத்தி  இருப்பதால்  அரசாங்கம்  இவ்வாண்டு  கூட்டரசு  தினத்தை  விமரிசையாகக்  .கொண்டாடப்  போவதில்லை.  

கொண்டாட்டத்துக்குச்  செலவிடும்  பணத்தைத்  தேவைப்படுவோருக்குக்  கொடுத்து  உதவப்போவதாக  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார்.

“கொண்ட்டாட்டத்துக்காக  ஒதுக்கப்பட்ட  தொகையை  ரிம7 மில்லியனை  ரிம1.5 மில்லியனாகக்  குறைத்து  விட்டேன்.  அந்தப்  பணம்  ஆதரவற்றோருக்கு,  உடல்குறை  உடையோருக்கு,  தனித்துவாழும்  தாய்மார்களுக்குக்  கொடுக்கப்படும்”, என்றாரவர்.