ரபீஸி: அன்வார் விவகாரத்தில் விளையாடுகிறோம் என்று எண்ணினால், பிகேஆரை நிராகரியுஙகள்

Rafizi - Anwar - Kajangகட்சி ஜனநாயக நடைமுறைகளை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்கள் கருதினால், காஜாங் இடைத் தேர்தலில் அத்தொகுதி வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவதை பிகேஆர் ஏற்றுக்கொள்ள தயார் என்று அக்கட்சியின் வியூக இயக்குனர் ரபீஸி ரம்லி கூறுகிறார்.

“நமது முடிவு ஜனநாயக நடைமுறைகளுடன் விளையாடுவதாகும் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இல்லை. நாங்கள் ஒரு பேராப்தான நிலையை எடுத்துள்ளோம்…இது ஜனநாயாக கோட்பாடு. இது துன்பத்தில் இன்பம் பெறுவதுமாகும்.

“நாங்கள் எங்களுடைய முதன்மை மனிதரின் (அன்வார் இப்ராகிம்) தலைவிதியை சினமிக்க காஜாங் வாக்காளர்களின் கைகளில் ஒப்படைக்கிறோம். நாங்கள் மன்னிப்பு கோரியுள்ளதோடு எங்களின் செயல்பாட்டிற்கு விளக்கம் அளித்துள்ளோம். ஆனால், எங்களுடைய மன்னிப்பு கோரிக்கையும் விளக்கமும் போதுமானதல்ல என்றால், அன்வார் தண்டிக்கப்படுவார்.

“இது ஒரு விளையாட்டு என்று நீங்கள் கருதினால், எங்களை நிராகரியுங்கள். நாங்கள் அம்னோவைப் போல் அமைவுமுறைவுடன் விளையாடுவதில்லை”, என்று “அன்வார்: காஜாங்கிலிருந்து புத்ராஜெயாவுக்கு” என்ற தலைப்பிலான கலந்துரையாடலின் போது ரபீஸி வலியுறுத்தினார்.

அம்னோவின் இனவாத அரசியல் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. பினாங்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் இதனைக் கண்டோம். பக்கத்தான் ரக்யாட் இதனை எதிர்த்துப் போராடுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

“இது காரணமில்லாமல் ஒரு எம்பியை (மந்திரி புசார்) மாற்றுவது பற்றியதல்ல. இது கட்சியின் உட்பூசல் பற்றியதுமல்ல. இம்மாதிரியான அரசியல் மற்றும் சமய விளையாட்டுகளை அரசியல் விளையாட்டின் வழி எதிர்த்துத் தாக்குதல் அவசியமாகும்.

“(தற்போதைய மந்திரி புசார்) அப்துல் காலிட் இப்ராகிமையும் அவரது நிருவாகத் திறமையும் மதிக்கும் அதே வேளையில், காலிட்டுக்கு அம்னோவின் இனவாத மற்றும் சமய அரசியல் விளையாட்டுகளை எதிர்கொள்ளும் திறமையோ, அனுபவமோ இல்லை என்பது தெளிவாகும்”, என்று ரபீஸி மேலும் கூறினார்.

அன்வார் காஜாங்கில் போட்டியிடுவது பக்கத்தானின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் ரபீஸி விளக்கினார். ஆனாலும், அது அதன் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்றாரவர்.

இது குறித்த விவாதங்கள் இரகசியாக நடத்தப்பட்டன. ஆனால், இந்த இரகசிய விவகாரத்தை எவ்வாறு பக்கத்தான் கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவிப்பது என்பது குறித்து எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ரபீஸியின் கூற்றுப்படி, ஜனவரி 24 இல் பாஸ்சின் ஒப்புதல் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலின் மூலம் பெறப்பட்டது. ஜனவரி 27 இல், டிஎபியின் ஒப்புதல் கிடைத்தது.

ஆட்சியாளர்களின் மாநாட்டின் பேச முடியும்

அன்வார் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதை அக்கருத்தரங்களில் பங்கேற்றவர்களின் ஒருவரான சமூக ஆர்வலர் ஹிசாமுடிஉன் ரயிஸ் ஆதரித்தார்.

மந்திரி புசார் என்ற முறையில், அன்வார் ஆட்சியாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பக்கத்தானுக்கு வாக்களித்த 52 விழுக்காடு மலேசியர்களின் சார்பில் பேச முடியும் என்றார்.

“(பினாங்கு முதல்வர்) லிம் குவான் எங் அல்லா பிரச்னை குறித்து பேசினால் எவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், அன்வார் அதைப் பற்றி பேசினால், அது முற்றிலும் வேறுபட்ட விவகாரமாகும்”, என்று ஹிசாமுடின் மேலும் கூறினார்.