சுல்தான்கள் அரசமைப்பைப் பின்பற்ற வேண்டிவர்கள். அந்த வகையில் மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் அவர்களுக்கு அறுதி அதிகாரம் ஒன்றும் கிடையாது என்கிறார் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அஜீஸ் பாரி.
முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா, சிலாங்கூர் மாநில அரசமைப்புப்படி மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் சுல்தானுக்கே அறுதி அதிகாரம் என்று கூறி இருப்பதற்கு அப்துல் அஜீஸ் இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
அந்த முன்னால் நீதிபதி ஒரு தீர்ப்பு எழுத வருடக் கணக்கில் நேரம் எடுத்துக் கொண்டவன். சட்டமும் தெரியாது. தீர்ப்பும் எழுத தெரியாது என்பதனை அவனது வாய்க்கொலுப்பில் இருந்தே தெரிகின்றது. இவன் சட்டம் பயின்றது எங்கோ? ஒவ்வொரு மாநில சமஸ்தானபதியும் மாநில ஆளுநரைத் தேர்ந்தெடுக்க அவர்தம் “discretionary power” – ரை சட்டத்திற்குட்பட்டே செயல்படுத்த முடியும். சட்டசபையில் யார் ஒருவருக்கு தனி மெஜாரிட்டி பலம் இருக்கின்றது என்று கண்டறிந்து அவரையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது வழக்குமுறை. அதை சமஸ்தானபதி மீறினால் மக்களின் எதிர்ப்பைக் எதிர்கொள்ள நேரிடும் என்பதை நமக்கு சரித்திரம் உணர்த்துகின்றது. இடையில் நடைபெறும் தலைமை ஆளுநர் மாற்றத்தையும் இவ்வாறே செய்ய வேண்டும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இருக்க அவசியம் இல்லை. பேராசிரியர் கூறுவது முற்றிலும் சரியானதே.
சுல்தானுக்கு அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ கடைசி அதிகாரம் அம்னோவுக்குத் தான் உண்டு. சட்டத்தைக் கொண்டு குப்பையில் போடுங்கள்!
நீங்கள் சொல்வது நம்பகமானது; அவர்…. கூலிக்கு மாரடிக்கும் கும்பலின் அங்கத்தினர். கூலி கூடினால் இன்னும் சற்று வேகமாகவே அடிப்பார்..
அஜிஸ் பாரி , உங்களை போன்றவர் இருப்பதால் நீதி நிலை நாட்ட முடியும்.வாழ்த்துகள்.