ஆட்சியாளர் மன்றத்தில் சுல்தான்களிடமும் அதிகாரம் படைத்த மற்ற வட்டாரங்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் அன்வர் இப்ராகிம் மந்திரி புசார்(எம்பி) ஆக விரும்புகிறார்.
அன்வரின் முன்னாள் தோழர் சந்த்ரா முஸாபார் , பெரித்தா ஹரியான் நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
“எம்பி பதவி மட்டுமே அன்வரின் நோக்கம் என்று நான் நம்பவில்லை. அவருக்கு வேறு குறிக்கோள்கள் உண்டு. அவர் புத்ரா ஜெயாவை வெல்ல வியூகம் வகுக்கிறார்.
“தகுதியும் திறமையும் வாய்ந்த மந்திரி புசார், முன்னாள் எம்பியை விடவும் சிறப்பாக பணியாற்றுபவர் என்பதை நிறுவி மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முயல்வார்.
“மற்ற எம்பிகளுடன் கலந்து பழகி அவர்களின் ஆதரவைப் பெறவும் முயல்வார்…. மக்களுடன் அணுக்கமாக இருக்க முடியும். முக்கியமாக ஆட்சியாளர் மன்றத்தின்வழி ஆட்சியாளர்களுடன் நெருங்கிப் பழக முடியும்”, என்றாரவர்.
இப்படி நடந்தால் பொதுவாக பொதுமக்களுக்கும், நாட்டின் அமைதிக்கும் உகந்ததுதானே…?! இதில் என்ன தவறு உள்ளது? கண் முன் தெரியாத அளவுக்கு ஊழல்கள் புரியும், இன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும், நீங்கள் இப்போது வரிந்து ஆதரிக்கும் umNoB உண்மையில் குற்றம் குறை ஏதும் அற்ற ஒரு கட்சியா..?! அதன் தலைவர்கள் கண்ணியவான்களா?! அதைப்பற்றி வாய் திறப்பதே இல்லையே..?!
அன்வார் எடுத்த முடிவு சரியான எதிர்கால வியூகம் என்று சந்திரா முஷப்பார் அன்வாருக்கு போட்டுக் கொடுக்கின்றாரோ என்று எனக்கு டவுட் வருது!.