பிப்ரவரி 16-இல், யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா-வில் இஸ்லாமும் பேச்சுரிமையும் மீதான கருத்தரங்கம் ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அப்பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அனுமதி மறுப்புக்குக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை என இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணியின் இயக்குனர் டாக்டர் பாரூக் மூசா கூறினார்.
“அது ஒரு விவகாரமான தலைப்பாக அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால், அதை இரத்துச் செய்தது அவர்கள் பேச்சுரிமையை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.”, என பாரூக்.
ஆனாலும், ‘இஸ்லாம் பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலா’ என்ற தலைப்பைக் கொண்ட அக்கருத்தரங்கம் குறித்த நாளில் டமன்சாரா ஹைட்ஸில் Wisma Manulife-இல் உள்ள உலக மிதவாதிகள் இயக்கத்தின் அலுவலகத்தில் நடக்கும் என்றாரவர்.
“இஸ்லாத்தையும்”, “பேச்சுரிமையையும்” சம்பந்தப் படுத்தினால், இந்நாட்டு சிவில் சட்டம் தறிகெட்டுப் போகும் என்ற காரணத்தினாலா?
பேச்சுரிமை என்பது அம்னோவுக்கும் உத்துசான் மலேசியாவுக்கும் தான். மற்றவர்கள் பேச்சு என்று சொல்லி நச்சுக்களைப் பரப்புபவர்கள்!!
பேச்சுரிமை என்பது இயற்கை/இறைவன் மனிதர்களுக்கு வழங்கியுள்ள ஓர் உன்னத பரிசு. அதை முறையாக, (நியாயமான) சட்டவிதிகளுக்கு உட்பட்டு, மற்றவர்களை இழிவு செய்யாமால், வேண்டும் என்றே மனது புண்படல் செய்யாமல், சகமக்களுக்கு இடையில் தூவேசம் உண்டாக்காமல், அவதூறு பரப்பாமல் …. etc இருக்க வேண்டும். ஆனால், தவறு செய்யும் அரசு, தலைவர்கள், மதவாதிகள் etc போன்றோரை சமூக நலன் கருதி அவர்களின் மனம் புண்படும்படி விமசரிப்பதில் குறை சற்றும் இல்லை. இல்லையென்றால் இந்தத் தவறுகளையும், திருட்டுத் தனத்தையும், ஊழல்களையும் எவ்வாறு திருத்துவது..?! அதன மூலம் தெரியாதவர்கள் பல அறிய, தெரிய வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். இதனால் சமூகத்திற்கு நன்மைதானே? பேச்சுரிமையை அடக்குவது அதிகாரம் உள்ளவர்கள் மக்களைத் தொடர்ந்து இருளிலேயே வைத்து ஒளியைப் பார்க்க விடாமல் செய்வது ஆகும். அவர்களின் பயம்; மக்கள் ஒளியைப் பார்க்க ஆரம்பித்தால் அவர்களின் அதிகாரநிலை பறிபோகும் என்ற பயம். அறிவியலுக்கு அபார பங்களிப்பு செய்துள்ள ஐரோப்பாவில் கூட, 14ம் நூற்ற்ராண்டில் renaissance தோன்றுவதற்கு முன்பு அங்கு மதவாதிகள் மக்களின் பேச்சுரிமையை மறுத்து, அவர்களை இருளில் வைத்து ஏகபோகம் செய்தனர். ஆக, ஏன் பேச்சுரிமைக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும்.? மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயமேன்.?! பேச்சுரிமை சிந்தனை ஆற்றலை வளப்படுத்தும்; தவறானவை களைந்து முறையானவை பிறக்க வழி பிறக்கும்.