செக்ஸ் விவகாரங்களைச் சொல்லிக் களங்கப்படுத்தும் பரப்புரையைத் தடுக்க வேண்டும்

surenகாஜாங்  இடைத்தேர்தலில்  அம்னோ-பிஎன், பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமை  செக்ஸ்  விவகாரங்களில்  சம்பந்தப்படுத்தி  அவரைக்  களங்கப்படுத்தும்  நோக்கத்தில்  பரப்புரை  செய்வதைத்  தேர்தல்  ஆணையம்(இசி)  தடுக்க  வேண்டும்.

அப்படிப்பட்ட  பரப்புரை  உத்தி  “முறைகேடானது,  அசிங்கமானது”  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்  கூறினார்.

“ 1998  தொடங்கி  அம்னோவும்  பிஎன்  அரசாங்கமும்    குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுகள்,  செக்ஸ்  வீடியோக்கள்  போன்றவற்றைக்  கொண்டு   அடிப்படையற்ற  களங்கப்படுத்தும்  இயக்கமொன்றை  மேற்கொண்டு  வருகின்றன.  இடைத்  தேர்தலின்போதும்  அன்வாருக்கு எதிராக  இட்டுக்கட்டப்பட்ட  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தி  வாக்காளர்களை  ஏமாற்ற  அம்னோ  திட்டமிடுகிறது”,  என்றவர்  வலியுறுத்தினார்.

இப்படிப்பட்ட  கீழ்த்தரமான  பரப்புரைக்கு  இசி  இடமளிக்கக்கூடாது  என்றும்  தேர்தல்  நேர்மையாக  நடப்பதை  அது  உறுதிப்படுத்த  வேண்டும்  என்றும்  சுரேந்திரன்  கேட்டுக்கொண்டார்.