பரப்புரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடப்பு விதிகள் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. “செக்ஸ் விவகாரங்களைச் சொல்லிக் களங்கப்படுத்தும்” பரப்புரையில் அம்னோ ஈடுபடுவதைத் தடுக்க அவை போதுமானவை.
தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கோட்பாடுகள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு வந்திருப்பதாக தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் ஆசிஸ் முகம்மட் யூசுப் கூறினார்.
அமலாக்கப் பிரிவு ஒன்றும் தேர்தல் பரப்புரைகளை அணுக்கமாகக் கண்காணித்துவரும் என்றாரவர்.
“இவை எல்லாம் அவர்களுக்கு (அரசியல் கட்சிகளுக்கு)த் தெரியும். மேலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்”, என அப்துல் அசீஸ் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளும் வாக்களிக்கும் நாளும் அறிவிக்கப்படும்போது இசி இதன் தொடர்பில் மேலும் விளக்கமான அறிக்கையையும் வெளியிடும் என்றாரவர்.
நீயும், உன் விதியும்!
அன்வாரின் பெயரை களங்கப்படுத்த அம்னோ தயாராகிவிட்டது. அன்வாரின் ‘செக்ஸ்’ விஷயங்களை மக்களிடையே பரப்ப ‘சிடி’ க்கள் தயாராகிவிட்டன. பரப்புரைகளிலும் அன்வாரின் பெயரை நாறடிக்க அம்னோ தயார் நிலையில் உள்ளது. இடைத்தேர்தல் பரப்புரைகளின் பொது பக்காத்தான் நிறைய போலிஸ் புகார்களை குவிக்கப் போகிறார்கள். இந்தப் புகார்கள் அனைத்தும் TONG sAMPAH வில் போடப்படும். EC தலைவர் அப்துல் அசிஸ் அம்னோவிற்கு வாலாட்டும் ஒரு நாய்.
ஆமாம்.., நடப்பு விதிகளுக்கு பஞ்சமே இல்லை..! தேவைக்கு மேல் தளிம்பி வழியுது… அதுதான் எல்லோருக்கும் தெரியுமே…! இப்ப உள்ள பிரச்சனை… – BN தவறு செய்யும்போது அதற்கு எதிரான, பாரபட்சமற்ற உங்க நடப்பு விதிகளின் அமலாக்கமே. சும்மா பேருக்கு, ஓரவஞ்சகமாக மாரடிக்கும் இஸதாபகம் … உங்க EC.