அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டியதற்காக சமூக ஆர்வலரான முகம்மட் அஸான் சபாரை தேசிய குடிமைப் பிரிவு (பிடிஎன்) “நன்றி கெட்டவராக” கருதுகிறது.
சிலாங்கூர் பிடிஎன் அதிகாரிகள் மாரா உதவிச் சம்பளம் பெற்ற மாணவர்களுக்காக நடத்தும் விளக்கக் கூட்டங்களில் தம் நிழல்படத்தைக் காண்பித்து உதவிச் சம்பளம் பெறும் மாணவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கக் கூடாது என்று கூறி வருகிறார்கள் என முகம்மட் அஸான் கூறினார்.
“நான் அடிக்கடி பேரணிகளில் கலந்துகொள்வதாகவும் அரசாங்கத்திடம் நன்றியுடன் நடந்துகொள்வதில்லை என்றும் (மாணவர்களிடம்) கூறுகின்றனர்”, என்றவர் தெரிவித்தார்.
பெர்சே பேரணிகள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டவர் அஸான். புத்தாண்டுக்கு முதல்நாள் விலை உயர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவரே தூருன் பேரணியை முன்னின்று நடத்தினார்.
“மாரா உதவிச் சம்பளத்தில் லண்டனுக்கு மேல்படிப்புக்குச் செல்ல நினைத்திருந்தேன். இனி, அது கிடைப்பது சந்தேகம்தான்”, என அஸான் கூறினார்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால், ;பிஎன் அரசாங்கம் நாடு “தனக்கே சொந்தம்” என்பதுபோல் நடந்து கொள்கிறது என்றாரவர்.
மட்டமாக சித்தரிப்பதில் இவர்களுக்கு அதிக நிபுணத்துவம் உண்டு. அதை செய்ய முடியாதவர்களுக்கு அடிக்கடி செய்து காண்பித்து இதில் அவர்களின் நிபுணத்துவத்தை உறுதி படுத்துகின்றனர்.