முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் உதவியாளர்கள் இருவர்மீது 1Azam திட்டம் தொடர்பில் வழக்குத் தொடராமல் சட்டத்துறைத் தலைவர் தாமதப்படுத்தி வருவது மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்துக்கு(எம்ஏசிசி) வழக்கு தொடரும் அதிகாரம் தேவை என்பதை உறுதிப்படுத்துகிறது.
அவ்விருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று எம்ஏசிசி கடந்த வாரம் நம்பிக்கையுடன் அறிவித்திருந்தது, ஆனால், சட்டத்துறைத் தலைவர் இதுவரை அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.
“இவ்வழக்கில் அரசியல் குறுக்கீடு இருக்கும்போல் தெரிகிறது”, என இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் ரபிஸி தெரிவித்தார்.
கடந்த வாரம் எம்ஏசிசி வெளியிட்ட அறிக்கை ஓன்று, டத்தோ பட்டம் கொண்ட முன்னாள் அரசியல் செயலாளர் ஒருவரும் அவரது தலைமையில் செயல்படும் ஒரு அறநிறுவனத்தின் இயக்குனர் ஒருவரும் ரிம1.1 மில்லியன் மோசடி செய்ததாகவும் மேலும் ரிம1 மில்லியனை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்படுவார்கள் எனக் கூறியது.
அந்த அதிகாரத்தைக் கொடுத்து விட்டு அப்புறம் ஆளும் கட்சி அரசியல்வாதிகலெல்லாம் கம்பி என்னவா? அம்னோ அரசியல்வாதிகள் என்ன அவ்வளவு கேனப்பையங்களா? நீங்கள் சொல்லிகொண்டிருப்பதை எல்லாம் கேட்டுகிட்டு சட்டம் இயற்ற. அவர்களெல்லாம் நம்மை விட சிறந்த அறிவாளிகள், பணத்தைக் கொண்டு சீட்டாட்டம் ஆட!
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மட்டும் என்ன நடவடிக்ககை எடுக்கும் ரபிஸி அவர்களே. அவர்கள் செயல் படுவதும் அம்னோ அரசாங்கதின் கீழ்தானே. அம்னோ கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் “குரோனிகள்” லாபத்திற்கே என்பதை நாடே அறியும். பல ஊழல் குற்றங்கள் புரிந்த அரசியல் வாதிகள் தன்மானம்,சூடு சொரனை இன்றி இன்னும் சுதந்திரமாகவே உலா வந்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் – அம்னோ குற்றவாளிகள்.
அதிகாரம் அம்னோ தான் கொடுக்க வேண்டும்! வேறு யார் கொடுப்பது?