தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு தற்போது குணமடைந்து வருகிறார்.
காய்ச்சல் மற்றும் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான லீ குவான் இயு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் இருந்து வருவதாக உள்ளூர் சிங்கப்பூர் டெலிவிசன் சேனல் நியுஏசியா அறிவித்தது.
அவருக்கு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர் குணமடைந்து வருகிறார் என்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வேண்டாம் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்றும் அச்செய்தி கூறிற்று.
ஆகவே, இன்று தஞ்சோங் பாகார் ஜிஆர்சி சீன புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளமாட்டார்.
தஞ்சோங் குடியிருப்பாளர்களுக்கும் அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறியது.
உங்களின் நலனுக்காக வேண்டுகிறோம்!
சிங்கப்பூரை வானளாவ உயர்த்தி,எம்மதமும் சம்மதம்,என்று செயலில் நிருபித்து காட்டியவர்,லீ குவன் இயு நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
தமிழுக்கும் இடம் கொடுத்து பாராளுமன்றத்திலும் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு எந்த சமயத்திற்கும் சிறப்புரிமை கிடையாது.
இங்கு-சிங்கப்பூரில் –
மாமாக்திர்க்கு சரிநிகராக நின்று சிங்கப்பூரை வானளாவிய உயர்த்திய லீ அவர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகின்றோம்.