சிலாங்கூரில் கடந்த சில மாதங்களாக பிஎன் கடுமையான அரசியல் தாக்குதல்களை நடத்தி வருவதால் அதைக் காப்பதற்கு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் சேவை மிகவும் தேவைப்படுகிறது என சிலாங்கூர் சட்டமன்றத் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.
சிலாங்கூரின் பொருளாதார ஆலோசகராக உள்ள அன்வார், சட்டமன்ற உறுப்பினரானால் மாநில விவகாரங்களில் தம்மை முறைப்படி ஈடுபடுத்திக்கொள்ள முடியும். எனவேதான், குறைகூறுவதை விடுத்து அவர் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிட நியாயமான வாய்ப்பளிக்க வேண்டும் என நிக் நஸ்மி கேட்டுக்கொண்டார்.
அன்வார், மந்திரி புசார் பதவியை அப்துல் காலிட் இப்ராகிமிடமிருந்து பறித்துக்கொள்வார் என்று கூறப்படுவதையும் நிக் நஸ்மி மறுத்தார்.
“சிலாங்கூரில் சவால்களைச் சமாளிக்கவும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் முயற்சிக்கு வலுச் சேர்க்கவும் அவருடைய பலம், அனுபவம், செல்வாக்கு எங்களுக்குத் தேவைப்படுகிறது”, என்றாரவர்.
அதே சமயத்தில் கணபதி ராவைப் போட்டு இந்தியர்களை ஏமாற்றி விட்டீர்களே! அதையும் சரி செய்யுங்கள். ஏற்கனவே சேவியரால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நிறைவேற்றினாலே போதும். ஒரு பொம்மையைப் போல் அவரைச் செயல் பட வைத்திருக்கிறீர்களே! தமிழனுக்கு அது இழப்புத் தானே!
அனுவார் வெற்றி பெற வாழ்துக்கள்
…..
ஆண்டவன் அருளிருந்தால் எதுவும் நடக்கும்.பாஸ் கட்சியை வாசல்லே நிறுத்தி டி எ பி யை வுள்ளே விட்டு நாடகம் ஆடுது.ஆட்சிக்கு வந்ததும் டி எ பி வெளியே பாஸ் வுள்ளே.கட்சி கோட்பாடு பாஸ் /டி எ பி வொருபோதும் வொட்டாது.எல்லாம் நாடகம்,,,, ,
kayee! அம்னோ அடாத நாடகமா? நாட்டுக்கு நல்லது நடக்குதுனா நாமே ஒத்துதுலைப்பு குடுக்கலாமே!