33 ஆண்டுகளாக சரவாக் முதலமைச்சராக இருந்துவரும் அப்துல் தயிப் முகம்மட் பதவி விலகுவது பற்றியும் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதையும் வரும் சனிக்கிழமை பிபிபி கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிஎன் எம்பி- களுடனும் சட்டமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்பு நடத்தியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது எனப் பெயர் குறிப்பிடப்படாத சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
“எனக்கு 75 வயதாகிறது. இப்போது இருப்பதுபோல் ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் இருக்க முடியாது. அதனால், எதிர்வரும் தேர்தலின்போது பணி ஓய்வு பெற விரும்புகிறேன். அதுவே, என் கடைசி தேர்தலாக இருக்கும்”, என்று தயிப் அச்சந்திப்பின்போது கூறினாராம்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் இருக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் ஒரு மாநிலத்தைச் சுரண்டுவதற்கு இதெல்லாம் ஒரு வயதா!
நீர் முழு ஓய்வு பெற்றால் இப்பொழுது பகல் இரவு பாராமல் எல்லாவிதத்திலும் ஏய்க்கப்படும் ஏமாளிகள் டயாக் மக்களுக்கு எவ்வளவோ நல்லது ஏற்படலாம். அதுபோல் கயமை மகாதீர் ஓய்வு பெற்றால் மலேசியாவுக்கு நல்ல விமோசனம் கிட்டும்..
சரவாக் மாநிலத்தில்தான் எல்லாவற்றையும் வழிச்சு நக்கி எடுத்து விட்டாரே, இனி பதவிக்கு அவசியம் இருக்காது,நாட்டில் உள்ள மிச்சம் மீதியை இவன் பிள்ளைகள் துடைச்சு எடுத்துடுவாங்க,சபா சரவாக் காட்டுவாசிகள் எதைப்பத்தியும் அக்கறைஎடுப்பதில்லை,இவர்கள் பண்டிப்புடிச்சு தின்னே காலத்தை ஓட்டிடுவானுங்க
சரவாமக்களுக்கு நல்லசெய்தி சனிஹேன் தொலைந்தது.இனிவரும் காலத்திற்கு நலமுடன் வாழ்க!
ஐயா, சனியன் ஒழியபோவதில்லை, வேறொரு தோற்றத்தில் இன்னும் மேலே போகபோகுது !! TYT ? அந்த இடத்திற்கு வந்துவிட்டால் – எந்த நீதிமன்றமும் எதையும் செய்யமுடியாது !! அடித்த கொல்லைக்கு ஆபத்தே இல்லை !! இன்னும் 10-15 ஆண்டுகள் தொழில் சுத்தமாக இருக்கும் !!!!
இந்த கம்மனாட்டி வெளியேறுவது சந்தேகமே. அத்துடன் அங்குள்ள மக்களின் மைந்தர்கள் இன்றும் நீண்ட வீடுகளில் இருந்து அரசியல் நிலை தெரியாமல் இருக்கின்றனர் –அவர்களுக்கு ஒரு புட்டி சாராயமும் 50 வெள்ளியும் கொடுத்தால் அவர்களின் வாக்கு அவனுக்குத்தான் — தேர்தல் சமயங்களில் எத்தனை ஹெலிகாப்டேர்கள் பெட்டி பெட்டியாய் கொண்டு செல்கின்றன?
அத்துடன் TUAI RUMAH -என்ற நீள் வீட்டு தலைவன்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவன் கள். நான் பல ஆண்டு கள் அங்கிருந்த அனுபவம்