தேர்தல் தேர்தல் ஆணையம் (இசி) தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் காஜாங் இடைத் தேர்தல் நடப்பது அதன் பணிக்கு இடையூறாக அமைந்துள்ளது.
பிகேஆரின் லீ சின் சே ஜனவரி 27-இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது எதிர்பாராத ஒன்று என்று கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், அதனால் இசி-யின் பணி பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் பணியில் மேலும் தாமதங்கள் நிகழா என்று நம்புகிறோம்”, என்றாரவர்.
அப்படியானால், தொகுதிகளைக் காலி செய்யுமுன்னர் அது பற்றி இசி-க்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா என அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அசீஸ், சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.
ஒவ்வொரு 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஓர் இடைத் தேர்தல் வந்தால் அத்தொகுதி மக்களும் மலேசியர்களும் மேலும் பயனடைவார்கள் என்பதற்கு காஜாங் இடைத்தேர்தல் ஓர் உதாரணம். காஜாங் தேர்தல் வந்ததும் டோல் கட்டணம் இவ்வருடம் பூராவும் ஏறாது என்று அம்னோ அரசாங்கம் அறிவித்து விட்டது. இதற்கு வழி ஏற்படுத்தியதர்க்காகவே அத்தொகுதி மக்கள் தாராளமாக அன்வாருக்கு ஒட்டு போட்டு வாகை சூட வைக்கலாம். அவர் மாநில முதல் அமைச்சரானால் மேலும் பல சலுகைகள் அத்தொகுதியை வந்தடையும் என்று தாராளமாக நம்பலாம். கெண்டையைப் போட்டு விறாளைப் பிடிக்கும் தந்திரம் நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர் அன்வார்.