அரசாங்கம் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான நிதிமன்ற வழக்கு பற்றியும் முஸ்லிம்-அல்லாதார் அச்சொல்லைப் பயன்படுத்துவதின் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கத்தோலிக்க வார இதழான த ஹெரால்டைக் “கேட்டுக்கொண்டிருக்கிறது”.
ஹெரால்ட், மற்ற இடங்களில் மலேசியாகினி போன்ற இணையச் செய்தித்தளங்களில் இடம்பெறும் கட்டுரைகளைத் தனது இதழ்களில் வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
“பொதுப் பாதுகாப்பையும், நல்லிணக்கத்தையும்” கருதி அவ்வாறு செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சு ஜனவரி 20-இல் அனுப்பி வைத்த கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மீண்டுமா? இதே பொழப்பா போச்சு இவனுங்களுக்கு! அவன் அவனுக்கு என்னென்னமோ பிரச்னை இருக்கு! நம்ம நாட்டுலே மட்டும்தான் சாமியை பெரை சுட்டுட்டானுங்கன்னு பெரச்சனை!
10 மலையில் 1000 ஆயிரம் சைதான் ஏறுது விஷயம் எப்படி,முருக பக்தர் என்னா சொல்றாங்கோ.
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது , அல்லது தீர்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் அந்த விஷத்தை பற்றி யாரும் கருது கூறக்கூடாது என்பது சட்டம் ! இந்த அல்லாஹ் என்ற சொல் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம் என்று மாமன்னர் கூறியிருக்கிறார்கள் , அது எப்படி ?? நீதிமன்ற தீர்ப்பே வராத நிலையில் மாமன்னரின் ஒருதலை கட்டளை சரியானதா , முறையானதா ? சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும் ! மாமன்னரின் உரையை பற்றி கேள்வி கேட்கவில்லை! மன்னிக்கவும் !!
ரஜூலா… இப்படியெல்லாம் கேட்டால்தான் ஜனநாயகம். முடியாது , கூடாது ,ஆகாது என்று என்று சொல்வதெல்லாம் பணநாயகம், பிணநாயகம்!
என்று MIC-MCA விதை தாங்கினான்களோ அன்றே நமக்கு எல்லாம் சனி பிடித்தது . அதுவும் சாமி காகாதிரின் விதைதாங்கி நம்மளை எல்லாம் மலிவுக்கு விற்று விட்டான் -இன்னும் என்ன சொல்ல? இப்பொழுது நாம் படுகிறோம் –காலம் தான் பதில் சொல்லும்.
மாமன்னர் சட்டம் போடவில்லை மாறாக கெடா சமஸ்தான அதிபதியாக அவர் பிறந்த நாளின் போது அவர் சார்பில் விடபட்ட அறிக்கை. பாவம் அவர் அக்கடான்னு தோளில் துண்ட போட்டுக்கிட்டு துக்கடான்னு உட்கார்ந்திருக்கின்றார். அவரை ஏன் சும்மா, சும்மா கிள்ளிப் பார்க்கின்றீர்கள். உணர்ச்சி இருக்கின்றதா என்று கிள்ளிப் பார்கிண்றீர்களோ?