இது ஒன்றும் குந்தா கிந்தே நாடல்ல: பிகேஎன்எஸ்-ஸைச் சாடியது எம்டியுசி

mtucபிகேஎன்எஸ்  ஒப்பந்தப்  பணியாளர்கள்  24-நேர  அறிவிக்கை  கொடுத்து  பணிநீக்கம்  செய்யப்பட்டது  ‘ரூட்ஸ் (வேர்கள்)’ நாவலில்     அடிமைகளுக்கு   இழைக்கப்படும்   கொடூரங்களை  நினைவுபடுத்துகிறது.

பிகேஎன்எஸ்  செய்கை   குறித்துக்  கருத்துரைத்த   மலேசிய  தொழிற்சங்க  காங்கிரஸின்  துணைத்  தலைவர்  அப்துல்லா  சானி  அப்துல்  இவ்வாறு  கூறினார்.

“இது  குந்தா  கிந்தே (அந்நாவலின்  முக்கிய  கதாபாத்திரத்தின்  பெயர்) நாடல்ல.  எதையும்  சட்டப்படிதான்  செய்ய  வேண்டும்”,  என்றாரவர்.

சிலாங்கூர்  மேம்பாட்டுக்  கழகத்தின் துணை  நிறுவனமான  பிகேஎன்எஸ்  அவர்களின்  ஒப்பந்தங்களை  முடிவுக்குக்  கொண்டுவந்ததற்கு  நியாயமான  காரணங்களைக்  கூறாததால் அது   தொழிலாளர்  சட்டத்தை  மீறி  விட்டது  என அப்துல்லா  சானி  கூறினார்.