கேஎல்ஐஏ2 பாதுகாப்புச் சோதனையில் தேறாதது என்? அமைச்சு விளக்க வேண்டும்

kliaகேஎல்ஐஏ 2 பாதுகாப்புச்  சோதனைகளில்  தேறாமல்  போனதால்  அது  திறக்கப்படுவது  மேலும்  தாமதமடைந்துள்ளது.  இதற்கான  காரணத்தை  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  உடனடியாக  விளக்க  வேண்டும்  என  பிகேஆர்  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  வலியுறுத்தினார்.

அந்த  விமான  முனையம்  ஜனவரி  31-க்குள்  தகுதிச்  சான்றிதழைப்  பெற்றுவிடும்  என  அமைச்சர்  கடந்த  மாதம்   கூறி  இருந்ததை  நுருல்  நினைவுபடுத்தினார், 

nurulசிப்பாங்  நகராட்சி  மன்றம்,,  தீ  அணைப்பு, மீட்புப் பணித்  துறை, இண்டா  வாட்டர்  கொன்சோர்டியம்  ஆகியவை  மேற்கொண்ட  சோதனைகளில்  தலையாய  முனையக்  கட்டிடத்தில்  65 விழுக்காடு  பாதுகாப்புத்  தேவைகளுக்கு  ஏற்ப இல்லை  என்பது  தெரிய  வந்துள்ளது  என்றாரவர். 

“அவ்வளவு  தரக்குறைவான  கட்டுமானப்  பணி.  அதனால்தான் கட்டிடத்தின்  மூன்றில்  இரண்டு  பங்கு  பாதுகாப்புத்  தேவைகளைப்  பூர்த்தி  செய்யவில்லை”,  என்றாரவர்.