கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்திவைப்பு

khirஇன்று  கூட்டரசு  நீதிமன்றத்தில்  விசாரிக்கப்படவிருந்த  முன்னாள்  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்   தோயோவின்  மேல்முறையீடு  காலவரையின்றி  ஒத்தி  வைக்கப்பட்டது. 

2011-இல்,  பதவியில்  இருந்தபோது  அவர்  இரண்டு  துண்டு  நிலங்களையும்  ஒரு  பங்களாவையும்  வாங்கியதில்   ஊழல்  நிகழ்ந்திருப்பதாக  ஷா ஆலம் உயர் நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பை  எதிர்த்து  கீர்  அந்த  மேல்முறையீட்டைச்  செய்திருந்தார்.

“தவிர்க்க  முடியாத  காரணத்தால்”  அவரது  மேல்முறையீடு  மீதான  விசாரணை  ஒத்திவைக்கப்பட்டதாக  கூட்டரசு  நீதிமன்ற  தொடர்புப்  பிரிவுத்  தலைவர்  முகம்மட்  ஐஸுடின்  கூறினார்.

“அதை  விசாரிப்பதற்குப்  புதிய  தேதி பின்னர்  முடிவு  செய்யப்படும்”,  என்றாரவர்.  

உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை மேல்முறையீட்டு  நீதிமன்றமும்  கடந்த  ஆண்டு  நிலைநிறுத்தியது  என்பது  குறிப்பிடத்தக்கது.