தேசிய விவகாரங்கள் பற்றி இரு–தரப்பு கலந்துரையாடல் நடத்த பக்காத்தான் ரக்யாட் திரும்பத் திரும்ப அறைகூவல் விடுப்பதை வைத்து அது ஒற்றுமை அரசாங்கத்துக்கு அடிபோடுவதாக நினைக்கக் கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
“பிஎன் இதற்கு ஒத்துக்கொள்ளாது என்பதையும் சில (அம்னோ) தரப்புகள் இதை எதிர்க்கும் என்பதையும் அறிந்தே” கலந்துரையாடலுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பது என்ற நிலைபாட்டை பக்காதான் தலைமைத்துவம் கொண்டிருக்கிறது.
கலந்துரையாடல் நடத்துவது இரு தரப்பும் அபாயமிக்க இன, சமய விவகாரங்களை விட்டு விலகி இருக்க உதவும் என பக்காத்தான் தலைவர்கள் நம்புகிறார்கள்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரு-தரப்புக் கலந்துரையாடலை வரவேற்பதாகக் கூறியது ஓரளவு நம்பிக்கையூட்டும் எதிர்வினையாக இருந்தது.
ஆனால், பக்காத்தான் தலைமைத்துவம் அதைவிடவும் உருப்படியான ஒரு பதிலை எதிர்பார்க்கிறது.
“பேசலாம் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வோர் இரவும் தேசிய தொலைக்காட்சியில் என்னைப் போட்டுத் தாக்குகிறார்கள்”, என அன்வார் வருத்தப்பட்டுக் கொண்டார்.
அய்யா அன்வார் நீங்கள் அம்னோவுக்கு சிம்ம சொப்பனம்,சிங்கம் அம்னோவை விழுங்கிவிடும் என்று நடுங்கிப்போய் போட்டு தாக்குகிறார்கள் சிங்கத்தை!