அழியா மை குறித்து புகார் செய்த விமானிமீது வழக்கு

pilotகடந்த  ஆண்டு  13வது  பொதுத்  தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட  அழியா  மை  குறித்து  புகார்  செய்ததற்காக அரச மலேசிய  ஆகாயப்  படையின்  விமானி  ஒருவர்  நாளை  இராணுவ  நீதிமன்றத்தில்  விசாரணையை  எதிர்நோக்கியுள்ளார். அவர்மீது  ஏழு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ளன.

நாளை  விசாரணைக்கு  வரவேண்டும்  என்று  நேற்று  இராணுவ  நீதிமன்றத்திடமிருந்து  உத்தரவு  வந்ததாக  மேஜர்  ஜைடி  அஹ்மட்  சிலாங்கூர்கினியிடம்  கூறினார்.

வாக்களிப்பு  நாளில்  தேர்தல்  ஆணையம்  பயன்படுத்திய  அழியா  மை,  விரைவிலேயே  அழிந்துபோனதாக  போலீசில்  புகார்  செய்ததை  அடுத்து ( எப்-5 ஜெட்  போர்  விமானங்களைக்  கொண்ட) 12வது  படைப்   பிரிவுக்கு  ஆணை அதிகாரியாக  இருந்த  தாம்  பணி இறக்கம்  செய்யப்பட்டதாக  ஜைடி  சிலாங்கூர்கினியிடம்  தெரிவித்தார்.

அதன்பின்னர்  அவர்  பறப்பதற்கு  அனுமதிக்கப்படவில்லை.  ஆனால், சம்பளம்,  அலவன்ஸ்  எல்லாம்  வழக்கம்போல்  கிடைக்கிறது.