நஜிப்பை அறைந்தால் ரிம1,200 கொடுப்பதாக ஒரு என்ஜிஓ அறிவித்திருந்தால் என்னவாகும்?

1 limசில  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  திறந்த  வெளியில்  கோழிகளைக்  காவுகொடுப்பதையும் ஒரு  எம்பிக்கு  எதிராக  மிரட்டல்  விடுப்பதையும்  அனுமதித்த  போலீசை  லிம்  கிட்  சியாங்  கடுமையாகக்  கண்டித்தார்.

ஒரு  என்ஜிஓ  அரசாங்கத்  தலைவர்களுக்கு  எதிராக  இதேபோல்  நடந்துகொண்டிருந்தால் போலீஸ்  சம்பவம் நடக்கும்  இடத்துக்கு  முன்கூட்டியே  சென்று  நடவடிக்கை  எடுத்திருக்கும்  என்றவர்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  நேற்று  கோலாலும்பூரின்  இதயம்  போன்ற  பகுதியில்  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  கோழிகளை  அறுத்து  அவற்றின்  இரத்தத்தை  பிகேஆர்,  டிஏபி  பிரதிநிதிகளின்  உருவங்கள்  பொறிக்கப்பட்ட  ஒரு  பதாதைமீது பூசினார்கள். இதை  நேரில்  காண  ஊடகங்களும்  அழைக்கப்பட்டிருந்தன. 

மேலும்,  அந்த  என்ஜிஓ-கள்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்கின்  கன்னத்தில்  அறைந்து  அதை  அப்படியே பதிவு    செய்து  காண்பிப்போருக்கு  ரிம1,200 ரிங்கிட்  வெகுமதி  அளிப்பதாகவும்  அறிவித்தன. 

இதேபோல்  சில  என்ஜிஓ-கள்    ஆர்ப்பாட்டம்  நடத்தி  நஜிப்பின்  கன்னத்தில்  அறைந்து  அதற்குச்  சாட்சியாக  அதைப்  படம்  பிடித்துக்  காண்பித்தால்  ரிம1,200  வெகுமதி  என்று  அறிவித்திருந்தால்  என்ன  நடந்திருக்கும்  என்பதைக்  கொஞ்சம்  கற்பனை  செய்து  பாருங்கள்  என்று  லிம்  அவ்வறிக்கையில்  கேட்டுக்கொண்டிருந்தார். 

“அப்படி  ஓர்  அர்ப்பாட்டம்  நடந்திருந்தால்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  தலைமையில்  மொத்த  போலீஸ்  படையும்  அங்கு  சென்று  குவிந்திருக்கும்”,  என்றாரவர்.