பாலியல் உறவுமீதான ஆய்வைச் செய்தது நீலாயில் உள்ள ஒரு மருத்துவ நிலையமாம்

1 schoolநீலாய்  தொடக்கநிலைப்  பள்ளி  ஒன்றில்  பாலியல்  உறவுமீதான  ஆய்வைச்  செய்தது  அங்குள்ள  ஒரு  மருத்துவ  நிலையம்  என்று  நெகிரி  செம்பிலான்  கல்வித் துறை  கூறியது.

அது  அந்த  ஆய்வை  நடத்தியது  தங்களுக்குத்  தெரியாது  என்று  மாநிலக்  கல்வி  இயக்குனர்   கல்சோம்  காலிட்  கூறியதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது. 

“எங்களுக்கும்  அதற்கும்  தொடர்பில்லை.  மாநிலக்  கல்வித்  துறையின்  அனுமதியின்றி  அவர்கள்  அதைச்  செய்திருக்கிறார்கள்”,  என்றாரவர். 

அவ்விவகாரம்  பற்றி  விசாரணை  நடப்பதாகவும்  அவர்  தெரிவித்தார்.  

அந்த  ஆய்வை  வெளிச்சம்போட்டு  காண்பித்தவர்கள்  மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்களான  ஜே.அருள்குமாரும்(நீலாய்),  பி.குணசேகரனும்  ஆவர்.  அந்த  ஆய்வில் தொடக்கநிலைப்  பள்ளி  மாணவர்களிடம்  கைமுட்டுப்பழக்கம்  உண்டா,  ஆபாசப்  படம்  பார்ப்பதுண்டா,  ஓரினப்  புணர்ச்சியில்  ஈடுபட்டதுண்டா  போன்ற  கேள்விகள்  கேட்கப்பட்டனவாம்.