சந்திரன் பாஸ்கரனுக்கு இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட விருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஜோகூர் சுல்தான் தலையிட்டதால் அவருக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.
தண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி நேற்றிரவுதான் தங்களுக்குத் தெரிய வந்ததாக அவரின் சகோதரர் தாமோதரன் கூறினார்.
“கடைசி நேரத்தில் கிடைத்த செய்தியால் எங்கள் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. சுல்தானுக்கு எங்கள் நன்றி”, என்றவர் கூறியதாக ஃப்ரி மலேசியா டூடே செய்தித்தளம் கூறியது.
2003-இல் செய்த கொலைக்காக ஜோகூர் உயர் நீதிமன்றம் 2008-இல் சந்திரனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
தவறு செய்தவன் திருந்தனும்,
தப்பு செய்தவன் வருந்தனும்.!
கர்ணன் தப்பான நட்பால், உயிர் துறந்தார் …!
இவர் செய்த குற்றம் …..?
நல்லவராக வாழ வேண்டுகிறேன் !
உங்கள் குடும்பம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உங்கள் சகோதரர் உட்பட 12 பேர் கும்பல் சிறிய CD தகராறுக்காக பாராங் கத்தியால் 24 முறை மிகக்கொடூரமாக வெட்டப்பட்டு இறந்தவரின் குடும்ப மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும்…?! மன்னிக்க முடியாத கொலையை செய்து விட்டு மன்னிப்புக்கு மண்டியிட்டு மன்றாடுவது முறையா..?! தைரியத்துடன் தவறு செய்பவர்கள் அதே தைரியத்துடன் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த மன்னிப்புக்கு இண்ட்ராப் ஒரு உந்துதல் போல் தெரிகிறது, காஜாங் இடைததேர்தலுக்கும் இதுக்கும் ஏதும் உறவு இருக்குமோ..?!
kamapo வின் கருத்தில் வேதனை தெரிகிறது.
இப்போ எங்கே போனது உங்களின் வீரம் ?? இப்படித்தான் நமது இந்திய இளைஞர்கள் மண்டையில் மூலை இல்லாமல் உனர்சிவசபடுகிரார்கல் !! “சிறிய CD தகராறுக்காக பாராங் கத்தியால் 24 முறை மிகக்கொடூரமாக வெட்டப்படுகிறார்கள் ??”
உண்மையை சொன்னால் கசக்கும்,வியர்க்கும்,புளிக்கும், …. இப்பொழுது அனைத்தும் குறுக்கு வழிதான்.உழைக்காமல் பணம் வேண்டும்.அவ்வளவுதான் !!
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்–>குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
Kamapo , சரியாக சொன்னீர்கள் . உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான் .
THOOKKIL PODDAAL TAMIL SAMUTHAAYATHIL ORU BAARAM KURAINTHU IRUKKUM ! ENNA SEIVATHU ,KALAIYAALIYAI VALA VIDDAAL MEENDUM MEENDUM TAPPU SEIVAARGAL ENDRU INTHA SULTHAANUKKU THERIYAATHAA ?
இனிமேலாவது உருப்பட பாருங்கள் , முட்டாள் ரவுடிகளே !
உணர்ச்சி மிகுந்த நம் சமுதாயம் வீழ்ச்சிக்கு அடித்தளம் …….தண்டனையை மேலும் கடினமாக்க வேண்டும் …….இல்லையேல் இந்த கிழ் நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சமுதாயம் என்றும் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்பது உறுதி……தயவு செய்து குற்றம் இளைத்தவனுக்கு வாதாடாதீர்கள் …..கருணை கொள்ளாதீர்கள் ………