சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும்போது இப்போது பிபிபி கட்சியின் உதவித் தலைவராகவுள்ள ஆவாங் தெங்கா அலி ஹசன் முதலமைச்சராகலாம் என்று கூறப்படுகிறது. “சரவாக்கியர் ஒருவர்தான் சர்வாக்குக்குத் தலைமை தாங்க வேண்டும்” என்று தாயிப் கூறி இருப்பதிலிருந்து அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆவாங் தெங்கா அம்னோ-எதிர்ப்பாளர், உறுதியான மனம் படைத்தவர், தாயிப்பின் பார்வையில் வளர்ந்தவர், சரவாக்கின் பொதுப் பயனீட்டு அமைச்சு, தொழில் மேம்பாட்டு அமைச்சு, திட்டமிடல், சுற்றுச்சூழல் அமைச்சு போன்றவற்றைத் திறம்பட நிர்வகித்து வந்திருப்பவர் என்ற முறையில் அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றே அரசியல் பார்வையாளர்களும் கருதுகிறார்கள்.
தாயிப்புக்கு அடுத்தபடியாக, ஆவாங் தெங்காதான் அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அமைச்சராகவும் கருதப்படுகிறார்.
ஏன் முஸ்லிம் மேலானோ தான் முதல் அமைச்சர் ஆக முடியுமா? 1963ல் யார் முதல் அமைச்சர்? பிறகு என்ன ஆனது? அம் மாநிலத்தில் டாயாக்குகள் தான் பெரும்பான்மை –ஆனால் காலாங் நிங்க்கானுக்கு பிறகு எல்லாமே இந்த ஊழல் வாதியும் இவனின் மாமாவும் தான் — பணக்கார சீனர் மற்றும் அரசியலைப்பற்றி தெரியாத நீண்ட வீட்டு வாசிகள் ஆதரவுடனும் எதிர்ப்பவர்களை மட்டம் தட்டியும் இவ்வளவு காலம் ஆண்டு எல்லாவற்றையும் சுருட்டி மாபெரும் பணக்கார குடும்பமாகிவிட்டனர் — இதெல்லாம் எப்படி?