பினாங்கு அரசு, இப்போதைக்கு பத்து பெரிங்கி கடல்கரையை மூடாது. அப்பகுதியில் காணப்படும் ஈ கோலி பெக்டீரியா அளவு குறித்த சுற்றுச்சூழல் துறையின் அறிக்கைக்காக அது காத்திருக்கிறது. அறிக்கை கிடைத்த பின்னர் அது முடிவெடுக்கும்.
பெக்டீரியாவின் அளவு அபாயம் விளைவிக்கும் வகையில் இருக்குமானால் கடல்கரை மூடப்படும் என மாநில ஆட்சிக்குழுவில் விவசாயம், சுகாதாரம், புறநகர் மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவுள்ள டாக்டர் அரிப் பஹார்டின் கூறினார்.
கடல்கரையை மூட வேண்டும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்யா மொழிந்திருப்பது பற்றிக் கருத்துரைத்த டாக்டர் பஹார்டின், அவர் இவ்விவகாரத்தை அரசியலாக்கி மாநில அரசின் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார் எனச் சாடினார்.
ஒரு மருத்துவரான ஹில்மி மனம்போன போக்கில் பேசக்கூடாது. உண்மைகளின் அடிப்படையிலும் சான்றுகளுடனும் பேச வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.