சரவாக் எஸ்ஏஎம்எம் தாயிப் ஆளுநர் ஆவதை எதிர்க்கும்

1 abdul taibஅப்துல்  தாயிப்  மஹ்மூட்  சரவாக்  முதலமைச்சர்  பதவியிலிருந்து  விலகியதும்  மாநில  ஆளுநர்  ஆவதைத்  தடுக்கப்போவதாக  சொலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா(எஸ்ஏஎம்எம்)-வின்  சரவாக்  கிளை   எச்சரித்துள்ளது.

தாயிப்புக்கு  எதிராக  ஊழல்,  அதிகார  அத்துமீறல்  போன்ற  குற்றச்சாட்டுகள்   இருப்பதாகக்  குறிப்பிட்ட  சரவாக்  எஸ்ஏஎம்எம்  ஒருங்கிணைப்பாளர்  அஸான்  அக்மா,  அவர்  ஆளுநராக  நியமிக்கப்பட்டால்  அவருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பது  சிரமமாகி  விடும்  என்றார்.
“அது  நடந்தால்,  தாயிப்புக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுப்பது  கடினமாகி  விடும். தாயிப்  ஆளுநர்  ஆனால்  சட்ட  நடவடிக்கைகளினின்றும்  விலக்கு  பெறுவார். ஒருவேளை (அவரை  ஆளுநர்  ஆக்குவதற்கு)  இதுவே  காரணமாகவும்  இருக்கலாம்”,  என்றவர்  கருத்துத்  தெரிவித்தார்.

ஊழல்  விவகாரங்களில்  சம்பந்தப்பட்ட  ஒருவர்  மாநில  ஆளுநர்  ஆவதை  சரவாக்  எஸ்ஏஎம்எம்  தடுக்கும்  என்றாரவர்.