காஜாங் இடைத் தேர்தலுக்கு தாம், முன்கூட்டியே தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுபடுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பிகேஆரின் வேட்பாளரான அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.
அன்வார் கடந்த வாரம் காஜாங்கில் செராமா நடத்தித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக பிகேஆர் விளம்பரப் பிரிவின் முன்னாள் தலைவரும் இப்போது பெர்காசா உறுப்பினருமான ரஸ்லான் காசிமும் இன்னும் சிலரும் கூறி இருந்தனர்.
பிஎன்தான் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் தமக்கு எதிராக பரப்புரையைத் தொடங்கி இருப்பதாக அன்வார் கூறினார்.
“அவரிடம் சொல்லி டிவி 3-இடம், எனக்கு எதிராக விஷத்தனமான பரப்புரை தொடங்கப்பட்டுள்ளதா என்று கேட்கச் சொல்லுங்கள்…..
“ஒவ்வொரு நாளும் பல ஹீரோக்கள் வந்து (என்னைப் பற்றி) அள்ளி விடுகிறார்கள்”, என்று அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜிம்மி கார்ட்டரும் ரோனால்ட் ரீகனும் தேர்தல் டிபேட்டில் இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் , இருவரில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யவேண்டும். இருவரின் பேச்சையும் கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதை இவர்கள் இருவரின் நேர்மையான வாதத் திறமைதான் மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதிபரை முடிவு செய்யயும் ஒரு திருப்பத்தைச் செய்யும் நிலை. ரோனால்ட் ரீகன் மக்களைப் பார்த்து கேட்கிறார்…. ” வரும் செவ்வாய்யன்று தேர்தல் நாள். வரும் செவ்வாயன்று நீங்கள் எல்லோரும் வாக்குச் சாவடிக்குச் சென்று , வரிசையில் நின்று , அமெரிக்க வருங்கால ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்ய இருக்கிறீர்கள். அப்படி நீங்கள் வாக்களிக்கக் காத்திருக்கும் வேளையில் , நீங்கள் உங்களையே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும் தற்பொழுது நீங்கள் மிகவும் நன்றாக இருப்பதாக உணருகிறீர்களா? கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும் தற்பொழுது கடைகளுக்குச் சென்று மன திருப்தியோடு உங்களால் விலைக்குப் பணம் கொடுத்துப் பொருட்களை வாங்க இயலுகிறதா? கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும் இப்பொழுது நாட்டில் வேலையில்லாமை அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் திருப்தியான பதில் இல்லை என்றால் … வரும் நான்கு ஆண்டுகளிலும் இப்படியே தொடரும்படிக்கான வகையில் வாக்களிக்காமல் வேறு ஒரு முடிவினை நீங்கள் எடுக்க உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.” இப்படித்தான் கேள்விகளை மக்களின் முன்வைத்து அதிபரானார் ரோனால்ட் ரீகன். இப்படியெல்லாம் நியாயமாக , அறிவுபூர்வமாக, நாகரிகமாக அரசியல் நடத்தும் காலம் எப்போது வரும் இந்த நாட்டில்? இப்டிப்பட்ட பொருள்பொதிந்த கேள்விகளுக்கு எல்லாம் இனத்தைப் பார்க்காமல், மதத்தைப் பார்க்காமல் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையுமே மாத்திரம் மனதில்கொண்டு இந்த நாட்டு மக்கள் வாக்களிக்கும் அரசியலுக்கு முன் வருவார்களா? வந்தால் அதுவே இந்த நாட்டின் பொற்காலம் என்பேன்.
அம்னோ காரன்கள் ஆட்சியில் நியாயத்திற்கு இடமே இல்லை. எல்லா அதிகாரங்களும் இவன்கள் கையில் இதை உபயோகித்து ஆட்சியில் எக்காலத்திலும் இவங்களே உட்கார்ந்து இருப்பான்கள்- MIC-MCA துரோகிகளின் ஆதரவினால்– எல்லாம் அவன்கள் போடும் துண்டு எழும்புக்காக