அந்தக் கண்டனக் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது பொறுப்பற்ற செயல்

1 barகடந்த  வாரம்,  ஆர்ப்பாட்டக்காரர்கள்  சிலர்,  கோழிகளைப்   பலிகொடுத்து  அவற்றின்  இரத்தத்தை  அரசியல்வாதிகள்  சிலருடையை  உருவப்படங்களைக்  கொண்டிருந்த  பதாதைகள்மீது  தெளித்த  சம்பவத்துக்கு  எதிராக  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்காததை  மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  கண்டித்துள்ளது.

பொது  ஒழுங்குக்கு  மிரட்டலை  ஏற்படுத்திய  ஒரு  சம்பவத்தை  அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல்  இருப்பதாக  அம்மன்றத்தின்  தலைவர்  கிறிஸ்டர்  லியோங்  கூறினார். அச்சம்பவத்தின்போது  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்-கைக்  கன்னத்தில்  அறைவோருக்கு  ரொக்க  வெகுமதி  கொடுக்கப்படும்  என்றும்  கூறப்பட்டது.

“அதிகாரிகள்  உடனடியாகவும்  உறுதியாகவும்  நடவடிக்கை  எடுக்காதது  பொறுப்பற்ற  செயலாகும்”,  என  லியோங்  கூறினார்.