ஆளுநர் ஆனாலும்கூட தாயிப் தப்பிக்க முடியாது

1 aziz bariசரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தாயிப்  முகம்மட்  மாநில  ஆளுநராக  நியமிக்கப்பட்டா;ல்  அவர்மீது  எந்தச்  சட்ட  நடவடிக்கையும்  எடுக்க  முடியாது  என்பது  சரியல்ல  என்கிறார்  அரசமைப்புச்  சட்ட  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி. 

ஒன்பது  மலாய்  ஆட்சியாளர்களும்கூட  நீதிமன்ற  நடவடிக்கைகளின்ன்றும்  விலக்களிப்பட்டவர்கள்தான். ஆனாலும்,  கூட்டரசு  அரசமைப்பின்  182-வது  பகுதியின்கீழ்  ஒரு  சிறப்பு  நீதிமன்றம்  அமைத்து  அவர்கள்மீது  குற்றம்  சாட்ட  முடியும்  என்றாரவர். 

தாயிப்  சரவாக்  ஆளுநர்  ஆகிவிட்டால் அவர்மீதுள்ள  ஊழல்  மற்றும்  அதிகாரமீறல்  குற்றச்சாட்டுகள்  குறித்து  அவர்மீது  சட்ட நடவடிக்கை  எடுக்க  முடியாது  போய்விடும்  என்று  சொலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா(எஸ்ஏஎம்எம்)  கூறி  இருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.