காஜாங் இடைத் தேர்தலுக்கான பரப்புரையை அன்வார் இப்ராகிம் முன்கூட்டியே செய்யத் தொடங்கி விட்டார் என்று கூறப்படுவதை போலீஸ் விசாரிக்கும்..
கடந்த வாரம் பல கூட்டங்களை நடத்திய அன்வார் அமைதிப் பேரணிச் சட்டம் 2012-இன்கீழ் விசாரிக்கப்படுவார் என பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது. அச்சட்டத்தின்படி கூட்டங்களைக் கூட்டுவதற்குமுன் 10 நாள்களுக்கு முன்னதாகவே அவை பற்றி போலீசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
அன்வார் சட்டவிதிகளை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ஆசிசும் எச்சரித்துள்ளார்.
தேவை இல்லாமல் மாட்டி கொல்லாதே,மாட்டி கொண்டு பின் மக்கள் அனுதாபம் வேண்டி நாடகம் நடத்தாதே,சட்டம் எல்லாருக்கும் ஒன்றே.
அன்வர் மட்டுமே பிரச்சாரம் செய்வதாக சொல்வது முற்றிலும் பொய். கடந்த வாரமே கை தொலைபேசியில் அம்னோ காஜாங் மக்களை பிறை வட் என்னில் அழைத்து பதிவு செய்யப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன. முதல் தவறு, பொதுமக்களின் கை தொலை பேசி எண்களை அவர்களின் அனுமதி இன்றி எடுத்து அழைப்பது. இது கடந்த வருடம் அமுலுக்கு வந்த personal data act படி குற்றமாகும். பி எண்ணுக்கு ஒரு சட்டம் பகடானுக்கு மற்றொரு சட்டம்.