அமைச்சர்: விலை குறைவாக உள்ள கடைகளில் வாங்குவீர்

1 nancyவிலைவாசி  உயர்வுடன்  போராடும்  பயனீட்டாளர்கள்  கடைகளைத்  தேர்ந்தெடுத்து  பொருள்   வாங்க  வேண்டும்  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  வலியுறுத்தியுள்ளார். 

எல்லாக்  கடைகளும்  விலைகளை  உயர்த்தவில்லை.  அந்த  வகையில்  பொருள்கள்  வாங்குவோர்  விலைகளை  ஒப்பிட்டுப்  பார்க்க  வேண்டும்  என்றவர்  அறிவுறுத்தினார். 
“அண்மையில்  கூச்சிங்கில்  தேநீர்  அருந்தினோம். நாங்கள்  ஆறு  பேர்.  ரிம12  வந்தது.  அது  அதிகமா?”,  என்றவர்  வினவினார். 

“காய்கறிகளும்  அப்படித்தான். (உதாரணத்துக்கு) மிளகாய்  எங்கே  வாங்குவது  என்பதைத்  தெரிந்து  வைத்திருக்க  வேண்டும்.  சிலர்  ரிம1-க்கு விற்பார்கள்,  மற்றவர்கள்  ரிம2  என்பார்கள்..

“பெட்ரோனாஸ்  நிலையங்களில்  விலைகள்  உயர்வதில்லை. மைடினிலும்  விலை  உயர்வு  இல்லை.  எங்களுக்கு  வாராந்திர  அறிக்கை  கிடைக்கிறது”,  என்றாரவர்.