ஷாபியை நீக்கும் அன்வாரின் முயற்சி: உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

1 caseகுதப்புணர்ச்சி  வழக்கு II- தீர்ப்புக்கு  எதிராக  அரசாங்கத்தின்  மேல்முறையீட்டில்  அரசுதரப்பு  வழக்குரைஞர்களுக்குத்  தலைமைதாங்கும் மூத்த  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  அகற்ற  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டு  அன்வார்  இப்ராகிம்  செய்திருந்த  மனுவை  உச்ச  நீதிமன்றம்  ஏகமனதாக  தள்ளுபடி செய்தது.

ஐவர்  அடங்கிய  நீதிபதிகள்  குழுவுக்குத்  தாங்கிய  மலாயா  தலைமை  நீதிபதி  சுல்கிப்ளி  அஹமட்  மகினுடின்,  நீதிமன்றத்துக்கு  வெளியில்  செய்யப்பட்ட கோலாலும்பூர்  முன்னாள்  சிஐடி  தலைவர்  ஜையின்  இப்ராகிமின்  சத்திய  பிரமாணங்களையும்  அறிக்கைகளையும்  சாட்சியங்களாக  ஏற்பதற்கில்லை  என்றார்.

இது, ஷாபியை  அரசுதரப்பு  வழக்குரைஞர்  குழுவிலிருந்து  நீக்க  அன்வார்  மேற்கொண்ட  இரண்டாவது  முயற்சியாகும்.

முதலில்  அவர்  மேற்கொண்ட  முயற்சி  டிசம்பர்  20-இல்,  மேல்முறையீட்டு  நீதிமன்றத்தில்  தள்ளுபடி  செய்யப்பட்டது.