போலீஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுபவர்கள் உடல்நலத்துடன் இருப்பது பற்றி போலீசார் கவலைப்படுவதில்லையே அது ஏன் என்று மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம் கேள்வி எழுப்பியுள்ளது.
திங்கள்கிழமை நிபோங் தெபால் போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் இறந்துபோனதைச் சுட்டிக்காட்டிய அந்த என்ஜிஓ, அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி அவரது லாக்-அப் நாள்குறிப்பேட்டை ஆய்வுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“தவறினால், சாட்சியங்களைக் கலைத்த குற்றச்சாட்டுக்கு அந்த அதிகாரி ஆளாவார்”, என சுவாராம் ஒருங்ணைப்பாளர் ஆர். தேவராஜன் (வலம்) நேற்று ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
பிப்ரவரி 5-இல் கைது செய்யப்பட்ட ஆ. புண்ணியவான்,40, ஐந்து நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை நிபோங் தெபால் போலீஸ் நிலையம் ஒன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அதுவே, 2014-இல் போலீஸ் காவலில் நிகழ்ந்த முதல் இறப்பாகும். போலீசார் அதைத் “திடீர் மரணம்” என வகைப்படுத்தியுள்ளனர்.
கவனிக்கவும் இப்போ தொழில் கல்வி கட்பிக்க படுகிறது,அதில் நம் பிள்ளைகளுக்கு 2ம் 3ம் தரம் வாய்ப்புகு தள்ளபடுகின்றனர்.அகவுண்ட்டன் மனேஜ்மன் போன்றவை அவர் இனத்துக்கும் கொன்றக் போன்றவை நம்மவற்கும் கொடுக்கபடுது.இப்படியே போனா கிரிமினல் குற்றங்க்கல் குறையாது.நாம் பிறகு தீவிரவாதி அந்தஸ்து.