டிஏபி எம்பி தெரேசா கொக்கை அறைந்தால் வெகுமதி என்று அறிவிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம்(பிபிஐஎம்) கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய சீனப் புத்தாண்டு காணொளியைப் பதிவேற்றம் செய்த சிபூத்தே எம்பி எம்பியைக் கன்னத்தில் அறைந்தால் ரிம500 வெகுமதி என்று அறிவித்தவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் என்ஜிஓ-களின் பேச்சாளராக இருந்த முஸ்தபா ஹம்சா என பிபிஐஎம் தலைமைச் செயலாளர் டாக்டர் மா’அமோர் ஒஸ்மான் தெரிவித்தார்.
அவர் தனிப்பட்ட முறையில்தான் அந்த வெகுமதியை அளிப்பதாகக் கூறினார் என்றாரவர்.
பின்னர் வெகுமதித் தொகை ரிம1,200 ஆக உயர்த்தப்பட்டது.
“எனவே, தெரேசா கொக் கன்னத்தில் அறைந்தால் காசு என்ற அறிவிப்பில் பிபிஐஎம்-முக்குத் தொடர்புண்டு என்பதை நான் மறுக்கிறேன். அது எங்களின் நிலைப்பாடும் அல்ல”, என மா’அமோர் இன்று காலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஒரு இயக்கத்துக்கு தலைமை செயலாளராக இருந்து கொண்டு
பேசினால் எப்படி தனிப்பட்ட கருத்தாகும் ? எதோ பஸ்லில்,ரயிலில்
போகிறவன் சொன்னால் ஏற்று கொள்ளலாம்.