பெர்காசா: தாய்மொழிப் பள்ளிகளைவிட ஒருமைப்பாட்டுக்கே கவனம் செலுத்த வேண்டும்

1 eduஅரசாங்கம்  தாய்மொழிப்  பள்ளிகளுக்கு  உதவுவதை  நிறுத்திக்கொண்டு  தேசியப்  பள்ளிகளுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என  பெர்காசா  கேட்டுக்கொண்டுள்ளது.

தாய்மொழிப்  பள்ளிகளே  தேசிய  ஒருமைப்பாட்டுக்கு  முட்டுக்கட்டையாக  உள்ளதாய்  பெர்காசா  கூறுகிறது.

மலேசிய  ஐக்கிய  சீனப்  பள்ளிக்குழுக்களின் கூட்டமைப்பு (டொங்  சொங்)  அரசாங்கம் ஐக்கிய  தேர்வுச்  சான்றிதழுக்கு(யுஇசி)  அங்கீகாரம்  வழங்க  வேண்டும்  என்று  வலியுறுத்தி  இருப்பது  பற்றிக்  கருத்துரைக்கையில்  பெர்காசா  இவ்வாறு  கூறியது.

சீன  இடைநிலைப்  பள்ளிகளில்  வழங்கப்படும்  யுஇசி,  எஸ்டிபிஎம்  தேர்வு  போன்றது.  .

“யுஇசி-க்கு  அங்கீகாரம்  அளிக்கப்பட்டால்   அரசாங்கம்  தேசிய  ஒருமைப்பாட்டின்  அழிவுக்கு  வகை  செய்வதாகவே   பெர்காசா  கருதும்”, என  பெர்காசா  கல்வி  பிரிவுத்  தலைவர்  பேராசிரியர்  முகம்மட்  அமிர்  ஷரிபுடின்  எச்சரித்தார்.